In October 2019 our World Tamil Chess Federation committee made a decision to host the FIRST EVER WORLD TAMIL CHESS TOURNAMENT in London in Sept 2020. However, even with the recent outbreak of the global pandemic, we have not deviated from our original plans but have decided to hold an online tournament instead.
Winner details
Position | Cash | Winner | Country |
---|---|---|---|
1st place | 100 $ | Brijeash Saravanabavaan | Sri Lanka |
2nd place | 75 $ | Saravana Prakash Rohit | India |
3rd place | 50 $ | Charukgan Muhunthan | UK |
4th place | 40 $ | Sanjay Ramesh | Canada |
5th place | 30 $ | Adesh Easwaralingam | Denmark |
Best Female Participant | 50 $ | Abishna Anojan | India |
First ever world tamil chess tournament
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் 13.09.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டியினை நடாத்தியிருந்தது. இப் போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது. நடாத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து தரப்பினர் கலந்து கொண்ட போட்டியாக இது அமைந்திருந்தது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் இலங்கையில் இருந்து மாத்திரம் 41 வீதமானவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தார்கள் முறையே 21 நாடுகளும் பின்வருமாறு: Australia, British Virgin Islands, Canada, Denmark, France, Germany, India, Kenya, Malaysia, Netherlands, NewZealnd, Norway, Oman, Singapore, Srilanka, Sweeden, Switzerland, UAE, United Kingdom, United States, Uruguay
இந்த அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் வெற்றி, பெற்ற 5 இடங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக 345 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட இருக்கின்றன. வெற்றி பெற்றவர்களின் விபரம் அருகில் இணைக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையானது சமய, அரசியலற்ற, சதுரங்கத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கும் வளர்ப்பதற்காகவும் சதுரங்க ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
உலகில் பரந்துபட்டு வாழும் தமிழ் உறவுகளை, சதுரங்க விளையாடின் மூலம் ஒன்றிணைப்பதும் எமது நோக்கங்களில் ஒன்றாகும்.
இவ் அமைப்பு 2019 ஆண்டு சதுரங்க ஆர்வலர்கள் சிலரால், உருவாக்கப்பட்டு, இந்த வருடம் பிரித்தானியாவில் உலகளாவிய ரீதியில் ஒரு சதுரங்கப் போட்டியை நடாத்த திட்டமிட்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணத்தால் (Covid19), ஒன்லைன் போட்டியாக நடாத்த முடிவு செய்யப்பட்டது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற Online போட்டிகளை நடத்துவதென நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
லண்டனில் இயங்குகின்ற SUGUN என்கிற நிறுவனம் மற்றும் நோர்வே Oslo வைச் சேர்ந்த நிறுவனங்களாகிய LEARN 2 DRIVE மற்றும் ENGEL PARADIS போன்றவை இந்தப் போட்டிக்கு அனுசரணை வழங்கியிருந்தார்கள்.
பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் மற்றும் இப் போட்டியினை வெற்றிகரமாக நடாத்த அனுசரணை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் (WTCF) உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.