Blitz எனப்படும் 5 நிமிடங்கள் கொண்ட வேகப் போட்டியாக, சுவிஸ் முறையில் (Swiss System) 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த சதுரங்கப் போட்டிக்காக 17 நாடுகளைச் சேர்ந்த 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

Winner details

Position
Cash
Winner
Country
1st place 100 $ Kirushanth SivanandanSwitzerland
2nd place 75 $ Charukgan MuhunthanUK
3rd place 65 $ IM Arjun KalyanIndia
4th place 55 $ Sabapathipillai KopithanSri Lanka
5th place 45 $ Rohit Saravana PragashIndia
6th place 35 $ Mithun KalaiyarasanIndia
7th place 35 $ Aarunya Ravindran RanjanSri Lanka

வயதெல்லை அற்ற இப்போட்டியில் விண்ணப்பித்திருந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

10 வயத்திற்கு உட்பட்டவர்ளும் பெண் போட்டியாளர்களும் கணிசமான அளவில் பங்கெடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, கென்யா, நெதர்லாந்து, நோர்வே, ஓமான், சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா அகிய நாடுகளின் போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்த இணையவழி சதுரங்கப் போட்டியில் முதல் 7 இடங்களை வென்ற போட்டியாளர்களுக்கு 400 அமெரிக்க டாலர்கள் மொத்தப் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WTCF எனப்படும் உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம், உலகத் தமிழர்கள் மத்தியில் சதுரங்க வல்லமையை ஊக்குவித்து, சர்வதேச தரத்திற்கு தமிழ்ப் போட்டியாளர்களை வளர்க்கும் நோக்குடன் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த சதுரங்க ஆர்வலர்ளால் உருவாக்கப்ட்ட ஒரு அமைப்பாகும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக நோர்வேயிலும் இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களிலும் சமூகத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் நோர்வே தமிழ்ச் சங்கமும், முதன் முறையாக உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்துடன் இணைந்து, இப் போட்டியை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.