உலகத் தமிழர் சதுரங்க பேரவை 4 வது «WTCF Ceyon Rapid chess Open 2025» வவுனியாவில், வவுனியா மாவட்ட சதுரங்க சங்கத்துடன் ஒன்றிணைந்து, முதல் தடவையாக 10.08.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் இலங்கைக்கான 4வது போட்டி வவுனியாவில் நடைபெற்றது

உலகத் தமிழர் சதுரங்க பேரவை 4 வது «WTCF Ceyon Rapid chess Open 2025» வவுனியாவில், வவுனியா மாவட்ட சதுரங்க சங்கத்துடன் ஒன்றிணைந்து, முதல் தடவையாக 10.08.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

WTCF Ceylon Rapid Chess Open 2025 Winners

Tournament Results by Category

#CategoryRankPlayer NameLocationPoints
1Open 2025 1st Abilash Thavendran Jaffna
2Open 2025 2nd Selvakumar Thangarajah Jaffna
3Open 2025 3rd Anparasan Tharmenthira Jaffna
4Open 2025 4th Vithyasagar Kumukkesan Vavuniya 6
5Open 2025 5th Kajenthiran Theiventhiram Vavuniya 6
6Open 2025 6th Pasupathan Tharmalingam Jaffna 6
7Open 2025 7th Abishanth Vijayakumar Mullaitivu 6
8Open 2025 8th Rajina Kanagasooriyar Kilinochchi 6
9U 15 Boys 1st Janukshan Brahalathanan Jaffna
10U 15 Boys 2nd Karthik Ravishankar Jaffna 6
11U 15 Boys 3rd Akshay Ilham Trincomalee
12U 15 Girls 1st Nilaxshiya Nirmalananthan Batticaloa -
13U 15 Girls 2nd Arunika Amuthan Vavuniya -
14U 15 Girls 3rd Kishobi Karunanithy Vavuniya -
15U 13 Boys 1st Ashwin Subhananthan Vavuniya -
16U 13 Boys 2nd Thanikasan Soruban Jaffna -
17U 13 Boys 3rd Abhiseck Srinivasan Vavuniya -
18U 13 Girls 1st Kopitha Thevalingam Kilinochchi -
19U 13 Girls 2nd Sharniya Tharmaseelan Mullaitivu -
20U 13 Girls 3rd Puvanisha Jeevananthan Vavuniya -
21U 11 Boys 1st Divikesh Nanthasivam Amparai -
22U 11 Boys 2nd Sipisan Nimalan Kilinochchi -
23U 11 Boys 3rd Shypravin Sasimaran Jaffna -
24U 11 Girls 1st Yasvika Prasanna Jaffna -
25U 11 Girls 2nd Asmiga Janagan Jaffna -
26U 11 Girls 3rd Prithika Prasanna Jaffna -
27Best Women 1st Nilaxshiya Nirmalananthan Batticaloa -
28Best Eastern Player 1st Nilaxshiya Nirmalananthan Batticaloa -
29U 15 Boys 4th Keerthikan Thayanandarajan Jaffna -
30U 13 Boys 4th Jamirshan Nanthaseelan Vavuniya -
31U 11 Boys 4th Thanis Suresh Mullaitivu -
Total Players

282

Categories

9

Locations

8

Total cash prize

125, 000

இப்போட்டி நிகழ்விலே பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. P.A.சரத்சந்திரா அவர்களும், மேலதிக உதவி அரசாங்க அதிபர் திரு. கமலதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியில் வயது வேறுபாடின்றி திறந்த (Open ) அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டு, பரிசில்கள் 11 வயது ஆண்கள், 11 வயது பெண்கள், 13 வயது ஆண்கள், 13 வயது பெண்கள், 15 வயது ஆண்கள், 15 வயது பெண்கள் மற்றும் திறந்த பிரிவில் 8 பேருக்கும் மற்றும் சிறந்த பெண் வெற்றியாளர், சிறந்த கிழக்கு மாகாண வீரர் என 24பரிசில்கள் வழங்கப்பட்டன. மொத்த பணப்பரிசில்கள் (125000.00) சான்றிதழ்கள், பதக்கங்கள் என வழங்கப்பட்டது.

அனைத்து 8மாவட்டங்களில் இருந்தும் 282 போட்டியாளர்கள் வருகைதந்து இப்போட்டியில் பங்குபற்றியமை சிறப்புக்குரியது.

இப்போட்டிகள் முற்றுமுழுதாக கணணி மயப்படுத்தப்பட்ட முறையில், ஏழு சுற்றுக்களாக நடைபெற்றன. இப்போட்டியில் திரு. அபிலாஸ் தவேந்திரன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். போட்டியாளர் அனைவருக்கும் பணப் பரிசும், வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பெற்றது.

அத்துடன் இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இலங்கையில் இதுபோன்றதொரு சதுரங்கப் போட்டி நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்று பலராலும் வரவேற்று பாராட்டும் வகையில் இப்போட்டிகளின் ஒழுங்கமைப்புக்கள் உலகத்தரம் வாய்ந்ததாக காணப்பட்டது என்று வருகைதந்த பலரும் வியந்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டிக்கான அனுசரணை நோர்வேயைச் சேர்ந்த GKA DIGITAL VISION, NORWAY மற்றும் UTSIKTEN SELSKAPSLOKALE AS, NORWAY ஆகியோர் வழங்கினார்கள்.